FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on July 16, 2016, 07:42:54 PM

Title: உலக அறிவு
Post by: thamilan on July 16, 2016, 07:42:54 PM
உலக அறிவை
மூன்றாகப் பிரி
 
அறிந்தவை!
இதுவரை அறியாதவை!
அறியவே முடியாதவை!

ஒரு ஆப்பிளில்
விதைகளுண்டு
இது அறிந்தவை!

அதில் எத்தனை
விதைகளுண்டு?
இது
இதுவரை அறியாதவை!

அதிலுள்ள மொத்த
விதைகளில்
எத்தனை மரமாகும்?
இது
அறியவே முடியாதவை!
Title: Re: உலக அறிவு
Post by: ரித்திகா on July 22, 2016, 01:35:31 PM
அருமை நண்பனே ....!!!

  அறிந்தவை ...
   அறியாதவை ...
      அறியமுடியாதவை ...
 என்று மூன்றுக்கும் சிறப்பாக விளக்கம் கொடுத்துள்ளீர் ....


   ~  வாழ்த்துக்கள் ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.lookingforloves.com%2Falbums%2Fflowers%2Fanimated%2520gif%2520flowers%2520images%2520glitter%252047.gif&hash=1c3b25114b671fc546c042c74975f1a31045c877)