FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on July 15, 2016, 11:11:02 PM

Title: காத்திருக்கிறேன்....
Post by: இணையத்தமிழன் on July 15, 2016, 11:11:02 PM

கனவுகள் தோறும் வந்தாய்...
கவிதைகள் நூறு தந்தாய்...

காதலை கண்ணில் விதைத்தாய்...
உன் கண்கள் கொண்டு வதைத்தாய்...

வளர்பிறை அன்பினை தந்தாய்...
இளம்பிறை என்னை நெய்தாய்...

மரணம் வரை தொடர்வதாய்
மனதில் எண்ணம் விதைத்தாய்...

உயிரான உந்தன் வரவுக்காய்....
மகிழ்வுடன் நானும் காத்திருந்தேன்...

எனைத் தேடி நீயும் வரவில்லை...
என் கவலை விடுதலை பெறவில்லை...

இருந்தும் உன் மேல் கோபமில்லை...
விலகி செல்ல விரும்பவில்லை....

இன்னொரு ஜென்மம் காத்திருப்பேன்...
ஏமாற்றாமல் வந்துவிடு...
Title: Re: காத்திருக்கிறேன்....
Post by: ரித்திகா on July 22, 2016, 02:16:06 PM
அழகான வரிகள் அண்ணா ...
   
   காதல் !!!!
      உண்மையான காதலாக இருக்க ...
          காத்திருப்பதும் சுகமே ....!!!



!!! வாழ்த்துக்கள் !!!

~ !!! என்றும் அன்புடன் ,
       தங்கை ரிதிகா !!! ~


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Frs162.pbsrc.com%2Falbums%2Ft268%2Fachi_grandong%2FFlowers%2520Gif%2F186886feka1abxx2.gif%7Ec200&hash=d52f86e9e22cdd74768ba63428796db64ce44a15)