FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 14, 2016, 09:44:45 PM

Title: ~ இட்லி மிளகாய்ப்பொடி ~
Post by: MysteRy on July 14, 2016, 09:44:45 PM
இட்லி மிளகாய்ப்பொடி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F3IAVlJn.jpg&hash=b18f9f511d41eac426497a1a4b84611fbd1bfa28)

தேவையானவை:

 உளுத்தம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – அரை கப், பெருங்காயம் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – வறுக்க

செய்முறை:

 வாணலியை அடுப்பிலேற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். ஆறிய பிறகு, உப்புசேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது நறநறப்பாக அரைக்கவும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள எடுப்பான காம்பினேஷன்.