FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 14, 2016, 04:03:55 PM
-
உருளை மசாலா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FROcS5NW.jpg&hash=1d76c15cc2ef2cbcf1e8f63f96fdc84033567fb1)
தேவையான பொருட்கள்:-
உருளைக்கிழங்கு – 4
தக்காளி சாறு
நெய் – தலா அரை கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவைக்கு
அரைக்க:-
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்
கசகசா – தலா 2 டீஸ்பூன்
தனியா, கரம் மசாலா – தலா 1 டீஸ்பூன்
பூண்டு – 8
செய்முறை:-
உருளைக்கிழங்கை தோல் சிவி சற்று பெரிய துண்டுகளாக்குங்கள். உப்பு சேர்த்து கொதிக்கும் நீரில் கிழங்கை சேர்த்து, வெந்ததும் நீரை வடியுங்கள். எண்ணெயில், இந்தக் கிழங்கைப் பொரித்தெடுங்கள்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள். இதனுடன் தக்காளி சாறு, உப்பு, உருளைக்கிழங்கு, சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். சாதம் முதல் சப்பாத்தி வரை எல்லாவற்றுக்கும் ஈடுகொடுக்கும் அசத்தலான அயிட்டம், இந்த மசாலா!