FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 13, 2016, 09:17:47 PM

Title: ~ வயிறு கோளாறுகளை தீர்க்கும் வேப்பம்பூ துவையல் ~
Post by: MysteRy on July 13, 2016, 09:17:47 PM

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2Fj5SMJU8.png&hash=158afea0083e4709ad974584bfb413fbcfa2688d)


தேவையான பொருட்கள் :

வேப்பம்பூ – ஒரு கப்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவைகேற்ப

செய்முறை :

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
* பின், அதே கடாயில் வேப்பம்பூ சேர்த்து லேசாக வறுத்து ஆற வைக்கவும்.
* அனைத்தும் ஆறியதும் வறுத்த உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வேப்பம்பூ, உப்பு, புளி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
* இப்போது வேப்பம்பூ துவையல் ரெடி.
* சூட சாதத்துடன் பிசைந்து சாப்பிடால் சுவையாக இருக்கும்.