FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JerrY on July 12, 2016, 11:37:30 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftremendouswallpapers.com%2Fwp-content%2Fuploads%2F2014%2F12%2FHappy-Friendship-day-2014-wallpapers-127.jpg&hash=4f387519a5a2267a257f636d94e54d7cfe2ddb53)
ஆயிரம் சிற்பிகள் சேர்ந்து செய்த
ஆயிரம் கால் மண்டபம் நாங்கள்
சோழனின் யானைகள் போருக்கு வந்தாலும்
எங்களின் சிரிப்பில் சாய்த்து விடுவோம்
நட்பு என்னும் தேசத்திலே
தினமும் பூக்கும் மலர்கள் நாங்கள்
சோகம் எல்லாம் உதிர்ந்து போக
புன்னகை மட்டும் பூக்கும் தேசம்
நட்பு என்னும் ஒற்றை வார்த்தையில்
இந்த உலகத்தை இழுத்து கட்டிவிட்டோம்
நண்பன் என்னும் சொல்லுக்குள்
எத்தனை தாய்களை பார்த்துவிட்டோம்
கல்லூரி எங்கள் புதியதோர் உலகம்
தோழியின் தோள்கள் தான் எங்களின் விண்கலம்
என்றும் நட்சத்திரமாய் நாங்கள் ஜொலிக்க
எங்கள் நட்பு மட்டும் நிலவாய்
நின்று வேடிக்கை பார்க்கும்
எத்துனை அழகு இது எங்களின் தேசம்
சூரியனின் தோள் மிதித்து காலையில் எழுந்தால்
தோழர்களின் முகம் தான் பேருந்து பயணத்தில்
தோழர்களின் இன்னிசை கண்ணை மறைத்தாலும்
கண்கள் அலைவது ஜன்னலின் ஓரத்தில் தோழிக்காக
சுகம் அது நட்பின் இன்னும் ஒரு பரிமானம்
கல்லூரியின் வாயிலை காக்கையை சுற்றுவோம்
ஒற்றுமையும் பகிர்தலும் தானே எங்களின் நட்பு
உரையாடலின் போது தொலைபேசி வந்தால்
அது என்றுமே தொல்லைதான்
அதுவே அழைப்பது தோழியாக இருந்தால்
தோழனே எங்களுக்கு தொல்லை தான்
சில நேரம் நட்பு செய்யும் திருவிளையாடல்
விளையாட்டயும் விளையாட்டாக பார்ப்பவர்கள் நாங்கள்
எங்கள் நட்பு இருக்க விளையாடாமல் என்ன
உணவில் கூட காதல் இருக்கும்
ஊட்டிவிடவும் ஆயிரம் கைகள் இருக்கும்
ஆனால் இது கல்லூரியின் இறுதி ஆண்டு
ஏனோ வாழ்கைக்கு கூட எங்களின்
நட்பின் மீது பொறாமை தான்
கண் வைத்து விட்டது எங்கள் மீது
கண்ணீரை துடைக்க ஆயிரம் கைகள் இருந்தாலும்
கலங்கி நிற்கிறோம் பிரிவை நினைத்து
இவன் ..
இரா.ஜெகதீஷ் ..
-
(https://www.freeonlinephotoeditor.com/tmp/img-5785b98bbf412/step0002.jpg?1468382440172)
அருமையான கவிதை தோழனே ....
-
sure friend