FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 11, 2016, 10:40:21 PM
-
குழந்தைகளுக்கான ரவுண்ட் சாக்கோ பிஸ்கட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fsss.jpg&hash=5f46503f02e4d2066a9d2eb8a33ac3f7b87148da)
தேவையான பொருட்கள் :
சாதாரண மேரி பிஸ்கட் – 15
உருக்கிய சாக்லேட் – தேவையான அளவு
ரவுண்ட் பிஸ்கட் மோல்ட் – 1
செய்முறை :
* பிஸ்கட் மோல்டில் உருக்கிய சாக்லேட் சிறிது விட்டு, அதன் மேல் பிஸ்கட்டை வைக்கவும். (Marrie பெயர் இருக்கும் பக்கம் அடிப்பக்கத்தில் வருவது போல்) அதன் மேல் மீண்டும் உருக்கிய சாக்லேட்டால் நிரப்பவும்.
* இதனை அப்படியே ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுக்கவும்.
* மோல்டில் இருந்து வெளியே எடுத்து, பிளைன் ஃபாயில் கோல்ட் அல்லது சில்வர் ஃபாயில் பேப்பரால் சுற்றி அழுத்தித் தேய்த்தால் பிஸ்கட்டில் உள்ள, டிசைன் பேப்பரில் தெரிந்து குழந்தைகளைச் சாப்பிட தூண்டும்.
* சதுர வடிவில் கிடைக்கும் பிஸ்கட்டிலும் இதை செய்யலாம்.
குறிப்பு :
சாக்லேட்டை பாயிலிங் செய்ய ஒரு பாத்திரத்தில் பார் சாக்லேட்டுகளை சிறிய துண்டுகளாக உடைத்துப் போடவும். இதைவிட பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பில் அடுப்பில் வைத்து சுட வைக்கவும். தண்ணீர் கொதி வர ஆரம்பிக்கும் போது, இதன் உள்ளே சாக்லேட் பாத்திரத்தை வைத்தால், தண்ணீர் சூட்டில் சாக்லேட் நன்கு உருக ஆரம்பிக்கும். இதை ஒரு மரக்கரண்டியால் நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.