FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 11, 2016, 10:36:47 PM
-
முளைக்கட்டிய சத்து மாவு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fsaththut.jpg&hash=65c33e62da77cb4ac32abe62e92a90a18f0430b2)
கம்பு – ஒரு டம்ளர்
கேழ்வரகு – ஒரு டம்ளர்
பச்சை பயிறு – கால் டம்ளர்
கொள்ளு – கால் டம்ளர்
பச்சை (அ) வறுத்த வேர்க்கடலை – கால் டம்ளர்
கொண்டைக்கடலை – கால் டம்ளர்
பொட்டுக்கடலை – கால் டம்ளர்
சோயா – கால் டம்ளர்
கருப்பு உளுந்து – கால் டம்ளர்
சம்பா கோதுமை – கால் டம்ளர்
மொச்சை – கால் டம்ளர்
பார்லி அரிசி – கால் டம்ளர்
வரகு அரிசி – கால் டம்ளர்
சாமை அரிசி – கால் டம்ளர்
தினை அரிசி – கால் டம்ளர்
சோளம் (விருப்பப்பட்டால்) – கால் டம்ளர்
எள் – ஒரு தேக்கரண்டி
பாதாம் – தேவைக்கேற்ப
பிஸ்தா – தேவைக்கேற்ப
முந்திரி – தேவைக்கேற்ப
ஏலம் – 10 எண்ணிக்கை
கம்பு, கேழ்வரகு, பச்சை பயிறு, கொள்ளு, பச்சை வேர்க்கடலை (வறுத்தது எனில் அப்படியே சேர்க்கலாம்) கொண்டைக்கடலை ஆகியவற்றை முளைக்கட்ட வேண்டும். அதற்கு 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்தவற்றை எடுத்து தண்ணீரை வடிகட்டி துணியில் போட்டு இறுக கட்டி காற்றோட்டமாக 24 மணி நேரம் வைக்கவும்.
இப்போது தானியங்கள் முளை விட்டிருக்கும். அவற்றை ஒன்றாக கலந்து வெயிலில் நன்றாக காய வைக்கவும்.
வெயிலில் காய வைத்த தானியங்களையும், மற்ற அனைத்து பொருட்களையும் தனித்தனியே வாணலியில் வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலை முளைக்கட்டாதது என்றால் அப்படியே வறுத்து சேர்க்கவும்.
வறுத்தவற்றை அனைத்தையும் ஒன்றாக கலந்து ஆற வைக்கவும்.
இந்த தானிய பருப்பு கலவையை மெஷினில் கொடுத்து அரைத்து வாங்கிக் கொண்டால் வீட்டிலேயே தயாரித்த சத்து மாவு ரெடி.