FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 09, 2016, 09:51:34 PM

Title: ~ பன்னீர் ரெசிபி ~
Post by: MysteRy on July 09, 2016, 09:51:34 PM
பன்னீர் ரெசிபி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Faqw.jpg&hash=71156fcb760bbd9b5dbab7fa636f9603e7551d07)

தேவையான பொருட்கள்

பன்னீரை ஊற வைக்க
சீஸ் – 200 கிராம்
தயிர் – ½ கப்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மாங்காய் தூள் – 1 தேக்கரண்டி
காட் மசாலா – 1/5 தேக்கரண்டி
கடலை மாவு – 1 மேஜைக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 3+1 தேக்கரண்டி
மீதமுள்ள பொருட்கள்
எண்ணெய் – 3+1 மேஜைக்கரண்டி
ஓமம் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2
குடை மிளகாய் – 1
தக்காளி – 2
தக்காளி சாஸ் – 1 தேக்கரண்டி
பாவ் பஜ்ஜி மசாலா – 1 தேக்கரண்டி
ஜீரகத் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
சாட் மசாலா – 1 தேக்கரண்டி
இஞ்சி – 1 மேஜைக்கரண்டி (துருவியது)
பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி(நறுக்கியது)

செய்முறை

ஊறவைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்
1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்
பின்பு கடலை மாவு சேர்த்து நன்கு கலக்கவும்
பன்னீரை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்
30 நிமிடம் அதனை மூடி ஃபிரிட்ஜில் வைக்கவும்
ஒரு நான் ஸ்டிக் பானில் 1.5 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பன்னீரை எண்ணெயில் போடவும்
மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். (பன்னீர் துண்டுகளை திருப்பிப் போட்டு இருபுறமும் வேக வைக்கவும்)
மீதமுள்ள எண்ணெயுடன் பட்டர் சேர்த்து சூடானதும் ஓமம் சேர்க்கவும்
பின்பு வெங்காயம், இஞ்சி, குடை மிளகாய் சேர்க்கவும்
தீயை அதிகமாக்கி 2 நிமிடம் வதக்கவும்
அதன் பின் நறுக்கிய தக்காளி சோ்க்கவும்
மாங்காய் தூள், சாட் மசாலா தவிர அனைத்து மசாலா தூள்கள் மற்றும் உப்பு சேர்த்து தக்காளி வேகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்
பின்பு தக்காளி சாஸ் சேர்த்து அவற்றை நன்கு மசித்துக் கொள்ளவும்
30 நிமிடங்கள் வேக வைக்கவும். தேவைப்பட்டால் 1 மேஜைக்கரண்டி நீர் சோ்க்கவும்
அதன் பின் பன்னீர் ஊற வைத்த மசாலா கலவை சேர்த்து நன்கு கலக்கவும்
பின்பு பொரித்த பன்னீர் சேர்த்து சில நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு அடுப்பபை அணைத்து விட்டு மாங்காய் தூள், சாட் மசாலா மற்றும் பச்சை மிளகாய் தூவி விடவும்
பன்னீர் ரெசிபி ரெடி!