FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 09, 2016, 09:27:20 PM

Title: ~ சத்தான கேழ்வரகு இட்லி ~
Post by: MysteRy on July 09, 2016, 09:27:20 PM
சத்தான கேழ்வரகு இட்லி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F11%2Fvfdg.jpg&hash=1d928d3e8dbd2c66ad215f5430922fc8fb9c5c58)

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 4 கப்
உளுந்து – அரை கோப்பை
உப்பு – தேவையான அளவு
வெந்தயம் சிறிது.

செய்முறை :

* உளுத்தம் பருப்பை வெந்தயத்துடன் ஒரு மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* கேழ்வரகு மாவை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துப் பின் அரைத்த உளுத்தம் பருப்பு மாவுடன் உப்பு போட்டு கலந்து 6 மணி நேரம் புளிக்க விடவும்.
* புளித்த மாவை இட்லியாக ஊற்றி வேக வைக்கவும்.
* இதற்கு தொட்டு கொள்ள கம்பு சட்னி, பூண்டு சட்னி சுவையாக இருக்கும்.