FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 09, 2016, 09:10:24 PM
-
வெந்தயக் குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F11%2Fvse.jpg&hash=da36ab109c4b538503d5fb4c3dbf2681225cd8a0)
தேவையான பொருட்கள் :
புளி – எலுமிச்சை அளவு
பெரிய வெங்காயம் – 3
வெல்லம், உப்பு – சுவைக்கு
வறுத்து பொடிக்க :
வெந்தயம் – 1. மேசைக்கரண்டி
சிகப்பு மிளகாய் – 12
பச்சரிசி – 2 மேசைக்கரண்டி
செய்முறை :
• வெந்தயம், சிகப்பு மிளகாய், பச்சரிசி மூன்றையும் தனித்தனியே வெறும் வாணலியில் நன்கு வறுத்து ஒன்றாகப் பொடி செய்து வைக்க வேண்டும்.
• புளியை ஊற வைத்து வடிகட்டி புளிக்கரைசல் 2 டம்ளர் அளவு வரும்படி கரைத்து வைக்கவும்
• பெரிய வெங்காயத்தை மிகப்பொடியாக அரிந்து வைக்க வேண்டும்.
• இதற்கு தாளிப்பும் தேவை. இல்லை. எண்ணெயும் தேவையில்லை. மிக மிக ருசியாக இருக்கும்.
• புளிக் கரைசலுடன் உப்பு, வெல்லம் சேர்த்து பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைத்த பின் பொடி செய்த பொருட்களை போட்டு பாதி வெங்காயத்தைச் சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க வைத்தாலே பளபளப்பாக வந்து கெட்டிப்படும். மீதி உள்ள வெங்காயத்தை அடுப்பை அணைத்தபின் பச்சையாகப் போட்டு இறக்க வேண்டும். ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்வீர்கள்.