FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 09, 2016, 12:55:01 AM
-
ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fpo-e1467905625958.jpg&hash=13dc77aee8da7c80207bfe80f5956f64a8e7003f)
தேவையானவை:
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்
தனியாதூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
சர்க்கரை – 1 டீஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்குகளை நன்றாக கழுவி, கத்தியினால் மேல் தோலை சுரண்டி எடுக்கவும். இவற்றை மேலிருந்து கீழ்வரை, கத்தியால் நறுக்கவும். (கவனம்: கடைசி வரை நறுக்கிவிட வேண்டாம்). கிழங்குகளை “அவன்”-ல் வைத்து, “மைக்ரோ ஹை”யில் 5 நிமிடம் வேகவைக்கவும். தேங்காய் துருவல், தனியாதூள், சீரகத்தூள், உப்பு, சர்க்கரை, பெருங்காயம், மிளகுத்தூள் இவற்றை சேர்த்து கலந்து வைக்கவும். பிறகு உருளைக்கிழங்குகளை ஒவ்வொன்றாக எடுத்து, கலவையை ஒரு டேபிள்ஸ்பூன் அடைத்து, ஒரு மைக்ரோ, வேவ் கண்ணாடி பாத்திரத்தில் வரிசையாக வைக்கவும். இதன் மேல், மீதமுள்ள பொடியை தூவி, சிறிது எண்ணெய் (1 அல்லது 2 டீஸ்பூன் வரை) தெளித்து, 5-லிருந்து 7 நிமிடங்கள் “மைக்ரோ ஹை”யில் வைக்கவும். கமகமக்கும், அட்டகாசமான ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு ரெடி! சாப்பிட்டவர்கள், மீண்டும் மீண்டும் கேட்பார்கள்.