FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 09, 2016, 12:45:14 AM

Title: ~ நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பசலைக்கீரை சூப் ~
Post by: MysteRy on July 09, 2016, 12:45:14 AM
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பசலைக்கீரை சூப்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fpasa.jpg&hash=cf0ed16474fca6834245c4cb76386d645fa9a578)

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 1 டீஸ்பூன்
பட்டை – 1 சிறிய துண்டு
பிரியாணி இலை – 1
கிராம்பு – 4
வெங்காயம் – 1
பூண்டு – 3 பற்கள்
பசலைக்கீரை – 3 கப்
உப்பு – தேவையான அளவு
மிளகு – தேவையான அளவு
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
குளிர்ந்த பால் – 1/2 கப்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சோளமாவில் சிறிது பால் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்.
* பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அதில் பசலைக்கீரை சேர்த்து 5 நிமிடங்கள் பச்சை வாசனை போக வதக்கி இறக்கி விட வேண்டும். கீரையை அதிக நேரம் வதக்கக்கூடாது.
* அதில் உள்ள பட்டை, பிரியாணி இலை, கிராம்பு ஆகியவற்றை எடுத்துவிட்டு ஆறவைத்து மிக்சியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அரைத்த கீரையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
* கடைசியாக கரைத்து வைத்துள்ள சோள மாவை சூப்பில் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான பசலைக்கீரை சூப் ரெடி!!!