FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 08, 2016, 11:55:03 PM
-
தக்காளி – பாசிப் பருப்புப் பச்சடி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fads.jpg&hash=d4b567b17f92b2fe5ef805370ccf69569198746e)
தேவையான பொருள்கள்
தக்காளி – 5
பச்சை மிளகாய் – 5
வெங்காயம் – 3
பாசிப் பருப்பு – 100 கிராம்
சாம்பார்ப் பொடி – 2 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை
பாசிப் பருப்பை வேக வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயத்தைத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை முழுசாக, நீள வாக்கில் அரிந்து கொள்ளுங்கள். வெந்த பாசிப் பருப்புடன், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்ப் பொடியுடன் உப்பையும் போட்டுக் கொதிக்க விடுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், மல்லித்தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, பருப்பு – தக்காளிப் பச்சடியை அதில் கொட்டவும்.
கொதித்துப் பக்குவமானதும் இறக்கி வைத்துப் பயன்படுத்தவும்.