FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: இணையத்தமிழன் on July 07, 2016, 10:43:20 PM

Title: அச்சம்
Post by: இணையத்தமிழன் on July 07, 2016, 10:43:20 PM
அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.

“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள்.
...
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!”

பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்

மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது. மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.

அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,

“அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.
கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.

அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”

அச்சமின்மையே ஆரோக்கியம்!
அச்சமின்மையே முழுமையான சுதந்திரம்..
பயமின்றி வாழ்வோம்.. எதையும் சாதிக்கும் வலிமை பெறுவோம்.