FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 07, 2016, 10:11:05 PM
-
அன்னாசி பழ ஜாம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fku-1.jpg&hash=5b33b5b8d791a928402736db42c810c5b70d5fbd)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fpineapple.jpg&hash=0f92854383799c686136ab405fd74a2f7feaef11)
தேவையான பொருட்கள்
அன்னாசிப் பழம் – 1 (நடுத்தர அளவு)
சர்க்கரை – 2 கப்
மஞ்சள் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
எலுமிச்சை சாறு – 2 மேஜைக்கரண்டி
அன்னாசி எசன்ஸ் – 1 தேக்கரண்டி
செய்முறை
அன்னாசிப் பழத்தை எடுத்துக் கொள்ளவும்
மேல் மற்றும் கீழ் முனையை வெட்டிக் கொள்ளவும்
பின்பு இரு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
பின்பு தோலை நீக்கி விடவும்
பின்பு பாதியாக நறுக்கிக் கொள்ளவும்
பின்பு அதனை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
பின்பு அன்னாசி துண்டுகளை மிக்சியில் போடவும்
அரைத்துக் கொள்ளவும்
பின்பு அதனை கடாயில் எடுத்துக் கொள்ளவும்
சர்க்கரை சேர்க்கவும்
நன்கு கிளறவும்
சர்க்கரை நன்கு கரையும் வரை வேக வைக்கவும்
பின்பு ஃபுட் கலர் சேர்க்கவும்
சிறிது கெட்டியாகும் வரை வேக வைக்கவும்
பின்பு தீயை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்
நன்கு கிளறவும்
இது லேசாக திரவமாக உள்ளது
எனவே இதனை சிறிது நேரம் குளிர வைக்கவும்
பின்பு அதனை காற்றுப் புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம்