FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 07, 2016, 09:51:18 PM

Title: ~ கேக்ஸ்... டிப்ஸ்...! ~
Post by: MysteRy on July 07, 2016, 09:51:18 PM
கேக்ஸ்... டிப்ஸ்...!

(https://scontent.fszb1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13627023_1590664571231012_4832531729642900405_n.jpg?oh=b9bbfb24af9e8b681af52e52c15eab3f&oe=57FF2F9C)

வீட்டில் கேக் செய்யும்போது, எப்போதுமே ரெசிப்பியில் சொல்லியுள்ளதைத் தவறாமல் பின்பற்றவும்.

* அவனை பிரீஹீட் செய்வது மிக முக்கியம்.

* ஒவ்வொரு முறை கேக் செய்யும்போதும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு டூத் பிக் குச்சியை கேக்கில் குத்திப் பார்த்து, அந்தக் குச்சியில் கேக் ஒட்டிக்கொள்ளாமல் சுத்தமாக வருகிறதா என்று பார்த்துவிட்டுத்தான் எடுக்கவேண்டும்.

* கேக்கின் மேல் ஐஸிங் செய்வதற்கு முன், கேக் நன்கு ஆறவேண்டும்.

* கேக் செய்வதற்கு, உப்பு சேர்த்த வெண்ணெய் உபயோகிப்பதாக இருந்தால், தேவையான பொருட்களில் உப்பைத் தவிர்க்கவும்.

* மைக்ரோவேவ் அவனில் பேக் செய்வதாக இருந்தால், ‘கன்வென்ஷன்’ முறையிலேயே செய்யவும்.

ஓவன் இல்லாதவர்களும் கேக் செய்யலாம்!

* வீட்டில் ‘கேக் அவன்’ இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் குக்கரிலேயே கேக் செய்யலாம்.

* குக்கரில் செய்யும்போது, கேஸ்கட் மற்றும் வெயிட் தேவையில்லை.

* குக்கரின் அடிபாகத்தில் 2 இன்ச் அளவுக்கு சுத்தமான மணலை நிரப்பிக்கொள்ளவும்.

* கேக் பாத்திரத்தை அதில் வைக்கும் முன்னர், மணல் நிரப்பிய குக்கரை அடுப்பின் மேல் வைத்து, நடுத்தரமான தீயில் 20 நிமிடம் பிரீஹீட்டிங் செய்யவும்.

* கேக் பாத்திரத்தை வைத்த பிறகு, வெயிட், கேஸ்கட் எதுவும் போடாமல் மூடிவைக்கவும்.

* கேக் வேகுவதற்கு, அவனுக்கான நேரத்தை விட, சிறிது அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளும்.
சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, குக்கரைத் திறந்து, டூத் பிக்கால் குத்திப் பார்த்த பிறகு, வெந்ததை உறுதி செய்யவும்.

* குக்கரை இறக்கி, கேக்கை எடுத்து ஆறவிட்டபின், விருப்பம் போல அலங்கரித்துப் பரிமாறவும்.