FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 07, 2016, 09:42:03 PM
-
தித்திப்பான பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fhj-1.jpg&hash=0aa8b7a59e43a3cc287d202828df926d252b7bdd)
தேவையான பொருட்கள் :
வெள்ளை ரவை – 1 கப்
பைனாப்பிள் – 1 சிறியது
நெய் – அரை கப்
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் – 3 1/2 கப்
ஏலக்காய்தூள் – சிறிது
பைனாப்பிள் எசன்ஸ் – சிறிது
முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா – தேவையக்கு
செய்முறை :
* பைனாப்பிளை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் அதில் ரவையை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து தனியே வைக்கவும்.
* அதே கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை லேசாக பொன்னிறமாகும் வரை வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
* பின் கடாயில் தண்ணீர் (3 1/2 கப்) ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் அதில் பைனாப்பிள் துண்டுகள், சிறிது கேசரி பவுடர் சேர்த்து வேக விடவும்.
* வெந்ததும், ரவையை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டிகள் விழாமல் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* ரவை வெந்ததும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும்.
* அடுத்து அதில் மீதமுள்ள நெய், பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
* இறுதியாக வறுத்து, உடைத்து வைத்துள்ள பருப்புகளை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
* தித்திப்பான பைனாப்பிள் கேசரி ரெடி.