FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 07, 2016, 09:36:33 PM
-
கிரிஸ்பி மிளகாய் சிக்கன்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fgtee.jpg&hash=d1fcc3104f28828bfd5c867fdd5b745fa3905bc0)
சிக்கன் – 1 கிலோ
மிளகாய் தூள் – 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 4
எலுமிச்சை – அரை மூடி
கலர்பொடி – 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
கருவேப்பிலை – 2 ஆர்க்கு
உப்பு – தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக இடித்து கொள்ளவும்.
சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.
2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் வைக்கவும்.
வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்.