FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 07, 2016, 03:56:19 PM
-
தக்காளி ஊறுகாய்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F9nXnBoj.jpg&hash=f5dba2430fddee0979eb8a851ea51bd35101862b)
தேவையானவை:
பழுத்த தக்காளி – அரை கிலோ
புளி – பெரிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் – 8 டேபிள்ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
காஷ்மீரீ மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன்
வெந்தயப் பொடி – அரை டீஸ்பூன்
கடுகுப் பொடி – 1 டீஸ்பூன்
வெல்லம் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
புளியை வெறும் வாணலியில் மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கி கொள்ளவும். ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தக்காளியை தண்ணீர் விடாமல் பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட், புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு 20 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். பிறகு, பெருங்காயத்தூள், உப்பு, காஷ்மீரீ மிளகாய்த்தூள், வெந்தயப் பொடி, கடுகுப் பொடி சேர்த்து மசாலா வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இறுதியாக வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கி, கைபடாமல் ஒரு ஜாடியில் எடுத்து வைத்து பயன்படுத்தவும்.