FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 07, 2016, 03:13:46 PM
-
சாக்லேட் கப் கேக்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F3cR8S72.jpg&hash=401c16cf32cc08f00f8b82357377a73bb8cef47d)
தேவையானவை
மைதா மாவு – ஒன்றே முக்கால் கப்
பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – ஒன்றரை டீஸ்பூன்
கோகோ பவுடர் – முக்கால் கப்
உப்பு – அரை டீஸ்பூன்
வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
ஐஸிங் சர்க்கரை – ஒன்றரை கப்
முட்டை – 2
வெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்
பால் – அரை கப்
மஃபின் கேக் லைனர், மோல்ட் – தேவையான அளவு
சாக்லேட் சிப்ஸ் – தேவையான அளவு
செய்முறை:
அவனை 180 டிகிரியில் 15 நிமிடம் பிரீஹீட் செய்யவும். மஃபின் கேக் மோல்டின் உள்ளே இதன் லைனர்களை வைக்கவும். மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சலித்துக்கொள்ளவும். பெரிய பவுலில் வெண்ணெய், ஐஸிங் சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு மிருதுவாகும் வரை அடித்துக் கொள்ளவும். இதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கலக்கவும். இதில் சிறிது மைதா மாவுக் கலவை, சிறிது பால் என்கிற ரீதியில் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து மிருதுவாக நன்கு கலக்கவும். கட்டிகள் விழக்கூடாது. பிறகு மோல்டின் உள்ளே இருக்கும் லைனரின் உள்ளே இக்கலவையை ஊற்றி, பேக்கிங் அவனில் 180 டிகிரியில் 15 முதல் 17 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்து எடுக்கவும். சாக்லேட்டின் மேல் சாக்லேட் சிப்ஸ் தூவி அலங்கரிக்கவும்.