FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 07, 2016, 02:56:07 PM

Title: ~ சைனீஸ் பேல் ~
Post by: MysteRy on July 07, 2016, 02:56:07 PM
சைனீஸ் பேல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FnmD0CD1.jpg&hash=141df7c7d9d7a32261c4a4bbaa608b05318705ee)

தேவையானவை:

பொரித்த நூடுல்ஸ் – ஒரு கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு – ஒன்று
கேரட் – ஒன்று
குடமிளகாய் – ஒன்று
முட்டைகோஸ் – கால் கப்
பொடியாக நறுக்கிய பூண்டு – 3 பல்
உப்பு – தேவையான அளவு
சில்லிஃப்ளேக்ஸ் – அரை டீஸ்பூன்
துருவிய பச்சை மாங்காய் – கால் கப்
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
தக்காளி சாஸ்- ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

உருளைக்கிழங்கை க்யூப்பாகவும், கேரட், குடமிளகாய், முட்டைகோஸை நீளவாக்கிலும் நறுக்கி வைத்துக்கொள்ளவும். நூடுல்ஸ் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் காய்களுடன் சேர்த்து, கலந்து நூடுல்ஸை கடைசியாகச் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.