FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on July 06, 2016, 11:17:32 PM

Title: காதலனின் ஆசை!
Post by: இணையத்தமிழன் on July 06, 2016, 11:17:32 PM

" என் மனைவியாய் வரப்போகுபவளை, அவளுக்கு முன் எழுந்து அவள் தூங்கும் அழகை ரசிக்க ஆசை!
தினமும் மலர் சூடி அவள் நெற்றியில் என் இதழ் சேர்க்க ஆசை!
அனைவரும் இருக்கும் நேரத்தில் கள்வனாய் அவளிடம் குறும்பு செய்ய ஆசை!
குழந்தையாய் அவள் செய்யும் தவறுகளை ரசிக்க ஆசை!
யாரும் இல்லா சாலையில் அவள் கைபிடித்து நடக்க ஆசை!
முதன் முதலில் நான் வாங்கும் வாகனத்தில் அவளோடு வெகுதுரம் செல்ல ஆசை!
மழை நேரத்தில் ஒரு குடைக்குள் அவளுடன் இருக்க ஆசை!
மழையில் நனைந்த என் தலையை அவள் புடவை நுனி கொண்டு துடைக்க ஆசை...!!
இப்படியே 60 ஆண்டு காலம் அவளோடு நான் வாழ ஆசை!
60 ஆன பின்பும் அவள் முகத்தில் விழுந்த ரேகையையும் கன்னத்தில் விழுந்த குழியையும் மூக்கு கண்ணாடி போட்டு ரசிக்க ஆசை!
 உனக்காக வாழ்ந்து உனக்காக சாக ஆசை !
உயிர் பிரியும் வேளையில் உன் முகம் பார்த்து உன் மடியில் உயிர் பிரிய ஆசை....!"