FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on July 06, 2016, 10:50:40 PM
-
தமிழென்னும் தென்றல் தவழ்கின்ற போது பூவாக நான்மாற வேண்டும் -அங்கு கமழ்கின்ற வாசம் கரைகின்ற போது கவிதைக்குள் சொர்க்கங்கள் தோன்றும் !
தமிழென்னும் வாளை நான் வீசும் வேளை மின்னல்கள் கண்கூசி மாயும் -இன்பத் தமிழ்கொண்டு சென்று வானோர்க்குத் தந்தால் அமிழ்தங்கள் வீணாகிப் போகும் !
தமிழ்பாடும் வாயில் மிளகாயும் கூட தேனாக மாற்றங்கள் காணும் - நாம் தமிழ்பேசிக் கொண்டு நடக்கின்ற போது வெயில்கூட மழைவேடம் பூணும் !
-
அழகிய பெண் ஒருத்தி அழுது கொண்டு நின்றாள். ஏன் இந்த அழுகை..? என்றேன். என் மக்கள் என்னை மறந்தார்கள் என்றாள்... யாரம்மா நீ..? என்றேன். தமிழன்னை என்றாள். வெட்கி தலை குனிந்தேன் நான்...
-
இந்த உலகின் எந்த மூலையிலும் தமிழுக்கு தமிழ் என்று தான் பெயர்.... ஆனால் உலகப்பெரு மொழியாம் இங்லீஷுக்கே ஆங்கிலம் என பெயர் வைத்தவன் #தமிழன் ........
-
தமிழென்னும் தென்றல் தவழ்கின்ற போது பூவாக நான்மாற வேண்டும் -அங்கு கமழ்கின்ற வாசம் கரைகின்ற போது கவிதைக்குள் சொர்க்கங்கள் தோன்றும் !
தமிழென்னும் வாளை நான் வீசும் வேளை மின்னல்கள் கண்கூசி மாயும் -இன்பத் தமிழ்கொண்டு சென்று வானோர்க்குத் தந்தால் அமிழ்தங்கள் வீணாகிப் போகும் !
தமிழ்பாடும் வாயில் மிளகாயும் கூட தேனாக மாற்றங்கள் காணும் - நாம் தமிழ்பேசிக் கொண்டு நடக்கின்ற போது வெயில்கூட மழைவேடம் பூணும் !
-
தமிழா தமிழ் பேசு....
தமிழ் பேசு தமிழா நாளொன்றுக்கு
ஒரு வாக்கியமேனும் ....!
நீ பேச அதை உன் சந்ததிகள் கேட்க
உரக்க தமிழ் பேசு தமிழா...!!
தாய்க்கும் மேலான தாய் தமிழை நீ பேசு தமிழா ..!!
தமிழை தயங்கி பேசும் தமிழனாய் நீ இல்லாமல் தமிழ் பேசு தமிழா ..!!
சங்கம் வளர்த்த தமிழை நீ சாகடிக்காமல் பேசு தமிழா ...!!
மொழி என்ற சொல்லுக்கு பொருள் தரும் தமிழை பிழை இல்லாமல் நீ பேசு தமிழா ..!!
வந்தவரெல்லாம் பார்த்து வியந்த விந்தை தமிழை நீ பேசு தமிழா ..!!
தரணியில் தமிழ் வாழ தமிழை நீ பேசு தமிழா ..!!
அமுதினும் இனிய தமிழை ஆங்கிலம் தின்னாமல் தமிழை நீ பேசு தமிழா ..!!...
.......