FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 06, 2016, 07:54:57 PM
-
கல்மி வடா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2F%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25BF-%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%25BE.jpg&hash=1ac998ae6c6efa876f500a5b8850a55eefe1bc77)
கடலைப்பருப்பு – 1 கப்,
இஞ்சி பூண்டு விழுது – தலா 1/2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 8 அல்லது விருப்பத்திற்கு ஏற்ப,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
முழு தனியா கரகரப்பாக பொடித்தது – 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,
உப்பு,
எண்ணெய் – தேவைக்கு,
காய்ந்த மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் சேர்க்கலாம்.
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இந்த மாவில் சோம்பு, தனியா, உப்பு சேர்த்து கலக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, கையில் தண்ணீர் தொட்டுக் கொண்டு பக்கோடா வடிவத்தில் உருண்டைகள் செய்து அல்லது கிள்ளிப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். மாலையில் டீயுடன் ஸ்நாக்ஸாக விருந்தினர்களுக்கு கொடுக்கலாம்.
குறிப்பு: இதில் பொடியாக நறுக்கிய புதினாவை சேர்த்து கீரை வடையாகவும் செய்யலாம். கரகரப்பாகவும், ருசியாகவும் இருக்கும்.