FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 05, 2016, 10:39:23 PM

Title: ~ குழந்தைகளுக்கு சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் லட்டு ~
Post by: MysteRy on July 05, 2016, 10:39:23 PM
குழந்தைகளுக்கு சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் லட்டு

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fkki.jpg&hash=30d3a245d334bffb7e834a17067ebe7b087fdfb9)

தேவையான பொருட்கள் :

உலர்ந்த அத்திப்பழம் (fig) – 10
​பேரீச்சம்பழம் – 12
பாதாம் – 12
முந்திரி – 12
பிஸ்தா – 12
​தேன் – 2 ​தேக்கரண்டி
​நெய் – 2 தேக்கரண்டி
​​வெள்​ளை எள்ளு – 1 ​மே​ஜைக்கரண்டி

செய்மு​றை :

* உலர்ந்த அத்திப்பழத்​தை ​வெந்நீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற ​வைக்கவும். அது முழு​மையாக ​வெந்நீரில் மூழ்கியிருக்க ​வேண்டும்.
* வாணலி​யை அடுப்பில் ​வைத்து மிதமான தீயில் எள்ளு ​லேசாக ​வெடிக்கும் வ​ரை வறுக்கவும்.
* பிறகு அதே வாணலியில் பாதாம், முந்திரி, பிஸ்தா இ​வைக​ளையும் வறுத்து ஆற வைக்கவும்.
* இம்மூன்றும் ஆறிய பிறகு மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். மாவாக அரைக்காமல் ​கொர கொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* ஊறிய அத்திப்பழத்​தை மிக்ஸியில் நன்றாக அ​ரைத்துக்​கொள்ளவும்.
​* பேரீச்சம்பழத்​தை ​மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.
* பிறகு வாணலியில் ​நெய் விட்டு அ​ரைத்த அத்திப்பழத்​தையும், பேரீச்சம்பழத்​தையும் ​சேர்த்து நன்றாக கலக்கவும். அ​வையிரண்டும் நன்றாக ஒன்று​ சேர ​வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்திருக்கவும்.
* 3 நிமிடங்கள் கிளறிய பின் ​பொடித்து ​வைத்துள்ள பருப்புக​ள் மற்றும் ​தேன் சேர்த்து நன்றாக கிளறவும்.
* அடுப்​பை அ​ணைத்துவிட்டு ​சற்று சூடாக இருக்கும் போதே கைகளில் ​கொஞ்சம் ​நெய் தடவிக்​கொண்டு இந்தக் கல​வை​யை லட்டுகளாக உருட்டி பிடிக்கவும்.
* உருட்டிய லட்டுக​ளை வறுத்த எள்ளின் மீது உருட்டி எடுத்து ​வைக்கவும்.
* எள் ​சேர்க்க விரும்பாதவர்கள் லட்டுக​ளை அப்படி​யேவும் சாப்பிடலாம்.
* சத்துகள் நி​றைந்த சர்க்க​​ரை ​சேர்க்காத இனிப்பு இது. குழந்தைகளுக்கு மிகவும் சத்து நிறைந்தது.