FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 05, 2016, 10:43:20 AM

Title: ~ சுகரை கட்டுப்படுத்தும் கோவக்காய் ~
Post by: MysteRy on July 05, 2016, 10:43:20 AM
சுகரை கட்டுப்படுத்தும் கோவக்காய்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FG5YxXU4.jpg&hash=418c6f588dd0fbc48b016f59e5c4304503a64763)

தீவிரமில்லாத நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும்.
கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மரக்கறியாகும். தீவிரமில்லாத நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும்.

பல வருடங்களுக்கு முன்பே, அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவில் நடத்திய ஆய்வில் கோவைக்காய் நீரிழிவு நோயைக் குறைக்கும் குணமுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.
நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று பெங்களூரில் நடத்திய ஆராய்ச்சியிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. அவ்வாறு செய்தால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பி விட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வாரம் 2 நாள் கோவைக்காயை சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் சரியாகும். கோவைக்காயை பீன்ஸ் போல பொறியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். மோருடன் ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து சேர்த்து அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன எல்லாப் பலன்களையும் பெறலாம்.
கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றாகும்.