FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 04, 2016, 11:43:37 AM
-
அகத்திக்கீரை துவட்டல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fagathi-keerai-seimuraiagathi-keerai-cooking-tips-in-tamilagathi-keerai-samayal-kurippuagathi-keerai-seivathu-eppadiagathi-keerai-rec.jpg&hash=db578290faae5a6c50992b90f921e6781d465932)
அகத்திக்கீரை – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் கீரையை அலசிப் போடவும். அத்துடன் உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் தனியாக சேர்க்க தேவையில்லை. கீரையிலுள்ள நீரே போதுமானது. அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். கீரை வெந்தபின் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
agathi keerai benefits in tamil
வெற்றிலைக் கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறுமென்மரவகை. தமிழ் நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும்.
1. கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, டீ, இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.
2. அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநீர்) குடித்துவர, சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.
3. இலைச்சாறும் நெல்லெண்ணெயும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழுங்கு விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி (அகத்தித் தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்
எனவே, அகத்திக்கீரையால் உண்டாகும் பயன்களை அனுபவிக்க மறக்காதீர்கள்.