FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on July 18, 2011, 12:52:02 PM

Title: நீ நான் காதல்
Post by: Anu on July 18, 2011, 12:52:02 PM
உன்னிடம்
கோபப்பட்டு
விலகும்போதுதான்
இன்னும்
நெருக்கமாய்
அணைத்துக்கொள்கிறது
காதல்
என்னை!!

*

காதலித்தது என்னவோ
நாம்
சத்தமே இல்லாமல்
திருமணம்
முடித்துக் கொண்டன‌
நம் விரல்கள்
மாலையாய்
மோதிரங்களை மாற்றி!!!

*

சீண்டல்களும்
சமாதானங்களும்
நேரங்களை களவாடிக்கொண்டு
சொற்ப நேர‌ங்க‌ளே
கிடைப்ப‌தால்
கோப‌மாம்
முத்தத்திற்கு
ந‌ம் காத‌லோடு!!!

*
 
என்னை
சீண்டி சீண்டி
விளையாடும்
உன்னை
சீண்டிப் பார்க்கலாமே
என்று கோவ‌மாய்
ந‌டித்தால்
எல்லாமும் அறிந்த‌வ‌னாய்
தொட‌ங்குகிறாய்
உன்
அடுத்த‌ சீண்ட‌லை....

*
 
தண்டவாளங்களாய்
இருக்கும்
இதயங்களில்
இனிதே தொடங்கியது
பயணத்தை
நம் காதல்!!!

*

உன் மெளன‌
நிழற்குடையில்
காத்திருக்கும்
என் காதலுக்கு
ஒரு
புன்னகையை மட்டும்
சிந்தி போ
நிம்மதியாய் இளைப்பாறும்!!!

*

பயணங்களில் கலையும்
என் கூந்தலை
சரி செய்கிறேன்
என்று
என் வெட்கங்களை
கலைத்து
விட்டு செல்கிறாய்!!!
 
*

தன்னை
மறந்து
தூங்கும் குழந்தையின்
சுகம் கண்டு
ஏங்குது
காதல்
உன் மடி
வந்து துயில!!!

*

இதுவரை
வெற்றிடமாய்
இருந்த‌
என்
இதயக்கூட்டில்
அனுமதியே
இல்லாமல்
விரித்துவிட்டாய்
உன்
காதல் சிறகை!!!

*

உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!!!

*

மழைக்காலங்களில்
மரங்களில் ஒளிந்திருக்கும்
மழைத்துளிகளை
அம்பலப்படுத்தும்
காற்றைப்போல்
என்னுள்
ஒளிந்திருக்கும்
காதலை
அம்பலப் படித்திவிடுகிறது
என்னை கடந்துசெல்லும்
உன் சுவாசம்!!!!
 உன்னை
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது

*

உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!


*

இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!
 ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!!
 என்னை
தூங்கச் சொல்லிவிட்டு
நம் கைப்பேசி
உரையாடலை
முடித்துவைத்தாய்
உன்முத்த சத்தங்களோ
என் தூக்கத்தோடுதான்
விளையாடுவேன்
என்று
அடம் பிடிக்கிறது!!!!
Title: Re: நீ நான் காதல்
Post by: குழலி on July 18, 2011, 03:54:07 PM
chanceless superb da enaku oru lover venum  :'(
Title: Re: நீ நான் காதல்
Post by: Global Angel on July 18, 2011, 09:56:33 PM
உன்னிடம்
கோபப்பட்டு
விலகும்போதுதான்
இன்னும்
நெருக்கமாய்
அணைத்துக்கொள்கிறது
காதல்
என்னை!!


unmayana varikal...