FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 03, 2016, 10:16:35 PM

Title: ~ செஃப் தாமுவின் மட்டன் சுக்கா வறுவல் ~
Post by: MysteRy on July 03, 2016, 10:16:35 PM
செஃப் தாமுவின் மட்டன் சுக்கா வறுவல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2FMutton-Chukka-Varuval-in-tamilmutton-sukka-fry-recipe-tamil-nadu-style-e1445350415975.jpg&hash=0793b425ab92aa24d1a727e5a653f26cab19f66d)

தேவையான பொருட்கள்:

மட்டன்
வெங்காயம்
மஞ்சள் தூள்
உப்பு பட்டை, பிரிஞ்சி இழை, சோம்பு
இஞ்சி பூண்டு விழுது
மிளகாய் தூள்
தனியா தூள்
மிளகு தூள்
பொட்டு கடலை மாவு
கொத்தமல்லி இழை
கறிவேப்பிலை
எண்ணெய்

செய்முறை :

* குக்கரில் மட்டனை போட்டு மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, 1 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

* கடாயில் எண்ணெயி ஊற்றி சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளரவும்.

* பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த கறியை போட்டு வதக்கவும்.

* மட்டன் நன்கு வெந்து சுண்டி வரும் போது பொட்டுகடலை மாவு, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.