FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 02, 2016, 09:27:06 PM

Title: ~ காய்கறி வெள்ளை குருமா ~
Post by: MysteRy on July 02, 2016, 09:27:06 PM
காய்கறி வெள்ளை குருமா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fkuu-e1467356610460.jpg&hash=7a9070085f48b214b9ae6abf966adfe54c0fbf81)

தேவையான பொருட்கள்;

கேரட் – 1
உருளைக்கிழங்கு – 1
பச்சை பட்டாணி – ஒரு கையளவு (உரித்தது)
இது உங்கள் கைவசம் பீன்ஸ், காளிப்ளவர் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
காய்கறிகளை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.

தாளிக்க தேவையானவை:

எண்ணெய் ,நெய் தலா – 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்பு தூள் அல்லது 2 ஏலம்,2கிராம்பு,சின்ன துண்டு பட்டை முழுதாக)
இறுதியில் சேர்க்க நறுக்கிய மல்லி புதினா சிறிது மற்றும் சிறிய பாதி எலுமிச்சை பழத்தின் சாறு.

அரைக்க வேண்டியவை:

தேங்காய்த்துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 அல்லது 4
முந்திரி பருப்பு – உடைத்தது – 2 டேபிள்ஸ்பூன்
அல்லது கசகசா இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
சோம்புத்தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:

சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் நெய் விடவும்.நறுக்கிய வெங்காயம் வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்க்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்.
காய்கறிகளை சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
முக்கால் வேக்காடு வெந்த பின்பு உப்பு சேர்க்கவும்.அரைத்த தேங்காய் விழுது சேர்த்து மீண்டும் ஒரு கப் அல்லது தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.
கலந்து விடவும்.
அடுப்பை மீடியமாக வைத்து கொதிக்க விடவும்.
கொதி வந்த பின்பு அடுப்பை சிம்மில் வைத்து மூடவும்.
சில நிமிடம் கழித்து தேங்காய் வாடை மடங்கி காய் நன்கு வெந்த பின்பு
நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும்.உப்பு அளவை சரி பார்க்கவும்.
அடுப்பை அணைக்கவும். சிறிய பாதி எலுமிச்சை பழத்தின் சாறு பிழியவும்.மூடி வைக்கவும்.
சுவையான வெஜ் வெள்ளைக் குருமா ரெடி.
சப்பாத்தி அல்லது பரோட்டா சுட்டு சூடாகப் பரிமாறவும்.
குருமா மணத்தில் சப்பாத்தியை சுட்டு சுட்டு சாப்பிட்டு முடித்த பின்பு தான் ஆஹா ! சப்பாத்தியுடன் பரிமாறி படம் எடுக்கலையேன்னு நினைவு வந்தது.அப்புறம் என்ன, மீதி இருந்த குருமாவை படம் எடுத்து பகிர்ந்தாச்சு.
பரிமாறும் அளவு – 3 அல்லது 4 நபர்கள்.