FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 02, 2016, 09:09:49 PM

Title: ~ காலிஃப்ளவர் சுக்கா: ~
Post by: MysteRy on July 02, 2016, 09:09:49 PM
காலிஃப்ளவர் சுக்கா:

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fau.jpg&hash=a5466892bd9cc4d59c6d9eb2ae0da37495d1e818)

தேவையான பொருட்கள்;-

காலிஃப்ளவர் – அரைக்கிலோ
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை – ஒரு கைப்பிடி

செய்முறை:

* காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக பிரித்து வைக்கவும்.
கொதிக்க வைத்த நீரில் காலிஃப்ளவர், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு வடிகட்டி விடவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்யவும். நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற விடவும். இஞ்சி பூண்டு சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.காலிஃப்ளவர் துண்டுகள் சேர்க்கவும்.
* நன்கு பிரட்டி விடவும். மேற்குறிப்பிட்ட மசாலா பொருட்கள் மிளகாய்த்தூள், மிளகு,சீரகத்தூள், மல்லித்தூள் அனைத்தும் சேர்க்கவும். பிரட்டி விட்டி சிறிது தண்ணீர் தெளிக்கவும். மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும். அடுப்பை குறைத்து வைக்கவும். உப்பு சிறிது சேர்த்து, சரி பார்க்கவும்.
* மசாலா வாடை நன்கு அடங்கி காலிஃப்ளவர் சுருண்டு வர வேண்டும். நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டு விடவும். அடுப்பை அணைக்கவும்.
குறிப்பு: இதே போல் சிக்கன், பனீர் மற்றும் பேலியோ காய்கறிகளில் முயற்சிக்கலாம்.