FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 01, 2016, 11:48:32 PM
-
பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fpep.jpg&hash=19c18e2f1171c9cf7b3125b479c25370b8066a6d)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 3 (பெரியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து உருளைக்கிழங்கை தனியாக ஒரு தட்டில் வைத்து, தோலுரித்துக் கொள்ளவும்.
பின் கையால் அதனை உதிர்த்து விடவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
அடுத்து அதில் உப்பு சேர்த்து, தீயை குறைத்து 15-20 நிமிடம் பொன்னிறமாகும் வரை கிளறி, மிளகுத் தூளைத் தூவி பிரட்டி இறக்கினால், பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி!!!