FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 01, 2016, 11:37:14 PM
-
சுவையான சத்தான பாதாம் ராகி மால்ட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fasss.jpg&hash=b2c371e7fb133c0cf88fe66edf9f91ff0b1b51d9)
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 5 டேபிள் ஸ்பூன்
பால் – 2 கப்
தண்ணீர் – அரை கப்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
பாதாம் பொடி/நறுக்கிய பாதாம் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
* கேழ்வரகு மாவை வாணலியில் போட்டு 5 நிமிடம் வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* 1/2 கப் பாலில் ராகி மாவை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மீதமுள்ள பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் ராகி பேஸ்ட் சேர்த்து கட்டிகள் சேராதவாறு கைவிடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
* இறுதியில் அதில் ஏலக்காய் பொடி, தேன் சேர்த்து கிளறி இறக்கி, பாதாம் பொடியை சேர்த்து பரிமாறவும்.
* சுவையான சத்தான பாதாம் ராகி மால்ட் ரெடி!!!