FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 01, 2016, 11:06:45 PM
-
உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fku.jpg&hash=59f1a9f4efb6baa573dcf4b64609b9e30761a991)
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 1 கப் (வேக வைத்து மசித்தது)
மைதா – 3 – 4 மேஜைக்கரண்டி
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
எண்ணெய்/நெய் – பொரிக்க
சிரப்புக்கு
சர்க்கரை – 2 கப்
நீர் – 1 கப்
ரோஸ் வாட்டர் – சில துளிகள் (தேவைப் பட்டால்)
குங்குமப் பூ – 1 சிட்டிகை (தேவைப் பட்டால்)
செய்முறை
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
உருளைக் கிழங்கை வேக வைக்கவும்
பின்பு அதன் தோலை நீக்கி விடவும்
பின்பு அதனை படத்தில் உள்ளது போல துருவிக் கொள்ளவும்
அதனுடன் மைதா மாவு சேர்க்கவும்
சிறிதளவு பேக்கிங் சோடா சேர்க்கவும்
பின்பு அவற்றை நன்கு பிசைந்து கொள்ளவும்
பின்பு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
பின்பு ஒரு சாஸ் பானில் சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும்
நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். மீண்டும் 5 நிமிடம் வைக்கவும்
பின்பு அதனுடன் சல துளிகள் ரோஸ் வாட்டர் சேர்க்கவும்
குங்குமப் பூ சேர்த்து அதனை தனியே வைக்கவும்
பின்பு மிதமான தீயி்ல் ஜாமுன்களை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
அதன் பின் அதனை சூடான சிரப்பில் போடவும் சில மணிநேரங்கள் ஊற வைக்கவும்
பின்பு பரிமாறவும்