FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 30, 2016, 11:45:35 PM

Title: ~ மசால் வாழைக்காய் புளி ப்ஃரை ~
Post by: MysteRy on June 30, 2016, 11:45:35 PM
மசால் வாழைக்காய் புளி ப்ஃரை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fgtt.png&hash=5528e2abaf57628c345887dc19ed13679f986638)

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 2
காய்ந்த மிளகாய் – 2
தனியா – 2 டீஸ்பூன்
நல்ல மிளகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
புளி – நெல்லிக்காயளவு
தேங்காய் எண்ணெய் – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு, – 1/2 டீஸ்பூன்
காயத் தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

*வாழைக்காயின் தோலை சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
*வெறும் வாணலியில், மிளகாய், தனியா, மிளகு, வெந்தயம் ஆகியவற்றைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
* புளியை 1/4 கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்துப் பிழிந்து, புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
*ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் கடுகு போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
*பின்னர் அத்துடன் வாழைக்காய் துண்டுகல்ளைப் போட்டு அத்துடன் மஞ்சள் தூள, உப்பு சேர்த்து சற்று நேரம் வதக்கவும்.
*பின்னர் அதில் புளித்தண்ணீரை ஊற்றிக் கிளறி விடவும். அத்துடன் மேலும் அதில் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து, மூடி வேக விடவும்.
*காய் வெந்து, தண்ணீர் சுண்டியவுடன், பொடித்து வைத்துள்ள மிளகாய் பொடியைத் தூவிக் கிளறி விடவும்.
*கடாயில் மசாலாத்தூள் நன்றாகச் சேர்ந்து வதங்கியவுடன், இறக்கி வைக்கவும்.
* சுவையான மசால் வாழைக்காய் புளி ப்ஃரை ரெடி.!!!
*உடல்நலத்திற்கு: வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக்காய் பயன்படும்.