FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 30, 2016, 11:42:25 PM
-
மட்டன் சொதி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fmutton-sodhi-seimuraimutton-sodhi-cooking-tips-in-tamilmutton-sodhi-samayal-kurippumutton-sodhi-seivathu-eppadimutton-sodhi-recipe-in-tamil-e1467299231682.jpg&hash=6be4969751fc2c938717fe281f160241ff5e1619)
மட்டன் – 200 கிராம்
இஞ்சி விழுது – 30 கிராம்
பூண்டு விழுது – 30 கிராம்
பச்சை மிளகாய் – 6 (நீளவாக்கில் கிறவும்)
தேங்காய்ப்பால் (இரண்டாம் முறை எடுத்தது) – 200 மில்லி
தேங்காய்ப்பால் (முதல் முறை எடுத்தது) – 100 மில்லி
மஞ்சள்தூள்- 5 கிராம்
எலுமிச்சைப்பழம் – 1 (சாறு எடுக்கவும்)
கறிவேப்பிலை – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
பட்டை – 10 கிராம்
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு பவுலில் ஆட்டுக்கறி (மட்டன்), பச்சை மிளகாய், மஞ்சள் தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு, இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். பிறகு வெளியில் எடுக்கவும். ஆட்டுக்கறி சமநிலைக்கு வந்ததும், கடாயில் போட்டு கொதிக்க விடவும். தனியே ஒரு கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, இதில் கறிவேப்பிலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு பச்சை மணம் போகும் வரை வதக்கவும். பின்னர் கொதிக்க வைத்த மட்டனை இதில் சேர்க்கவும். இப்பொழுது முதல்முறை எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, உப்பை சரி செய்யவும். லேசாகக் கொதி வந்தவுடன் இறக்கி சூடாகப் பரிமாறவும். (அதிக நேரம் கொதிக்க வைத்தால், திரிந்து விடும்).