FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 29, 2016, 11:01:14 PM
-
கொல்கத்தா ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ஜால் முரி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fyt-1-e1467182257577.jpg&hash=98c35e60f10b0dc4bb38cae6881a40f5597c1eea)
தேவையான பொருட்கள்:
பொரி – 2 கப்
உருளைக்கிழங்கு – 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 4
சேவ்/மிக்ஸர் – 1/2 கப்
கருப்பு கொண்டைக்கடலை – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஊறுகாய் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
கடுகு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துண்டுகள் – சிறிது
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கருப்பு கொண்டைக்கடலையை ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும்.
* ஒரு பெரிய பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக போட்டுக் கைகளால் அல்லது கரண்டியால் நன்கு கிளறி விட்டு பரிமாறினால், ஜால் முரி ரெசிபி ரெடி!!!
* மாலை நேரத்தில் டீ, காபியுடன் இதை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
* குழந்தைகளுக்கு மிகவும் விருப்பான ஸ்நாக்ஸ் இது. இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்ய முடியும்.