FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 28, 2016, 11:30:54 PM
-
ராகி களி உருண்டை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F09%2F%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25BF-%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AE%25BF-%25E0%25AE%2589%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588.jpg&hash=23fed36fabc3be4c59a2b19fb863071ba5bf8553)
தேவையான பொருட்கள் :
ராகி மாவு – ஒரு கப்
உப்பு – ஒரு சிட்டிகை
தண்ணீர் – ஒன்றரை கப்
செய்முறை :
• ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
• பிறகு அரை டம்ளர் கொதித்த தண்ணிரை எடுத்து வைத்து கொள்ளவும்.
ராகி களி உருண்டை
• பின் கொதிக்கும் தண்ணீரில் ராகி மாவு கொட்டி மூன்றுநிமிடம் கைவிடாமல் கிளறவும். எடுத்துவைத்த தண்ணீர் தேவையானால் பயன்படுத்தி கொள்ளலாம்.
• நன்றாக கிளறிய பின் ஐந்து நிமிடம் தட்டு போட்டு முடிவைக்கவும்.
• இறக்கிய பின் தண்ணீர் தொட்டு உருண்டை செய்து கொள்ளவும்.
• அதிகம் சுண்ணாம்பு சத்து உள்ள களி உருண்டை தயார்.