FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 28, 2016, 10:54:10 PM

Title: ~ சத்தான கறிவேப்பிலை சட்னி ~
Post by: MysteRy on June 28, 2016, 10:54:10 PM
சத்தான கறிவேப்பிலை சட்னி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2F11.jpg&hash=a86b6f227e60edbb77968fa74e4bfdb04230b9fa)

தேவையான பொருட்கள்:

தேங்காய் – 1 துண்டு (துருவியது)
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 1/4 கப்
பச்சை மிளகாய் – 3
புளி – கோலி குண்டு அளவு
கடுகு – 3/4 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்த பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வறுத்து இறக்கிக் ஆற வைக்கவும்.
* ஆறியவுடன் அதனை மிக்ஸியில் போட்டு அதனுடன் துருவிய தேங்காய், புளி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னி கலவையில் ஊற்றி கலக்கவும்.
* சூப்பரான சத்தான கறிவேப்பிலை சட்னி ரெடி!!!