FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 27, 2016, 09:13:34 PM

Title: ~ ரவைக் கிச்சடி ~
Post by: MysteRy on June 27, 2016, 09:13:34 PM
ரவைக் கிச்சடி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fkii-2.jpg&hash=ce0110e2895c19629a470475c634bb6e266d4fdf)

தேவையானபொருள்கள்

பம்பாய் ரவை – 1 1/2கப்
வெங்காயம் – 2
உருளைக்கிழங்கு – 1
முட்டை கோஸ் – 5,6 இலைகள்
காரட் – 1
பச்சை பட்டாணி – 100 கிராம் (உரித்தது)
குடை மிளகாய் – 1
பீன்ஸ் – 10
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 8
இஞ்சி – சிறிது
எண்ணெய் – 1/4 கப்
பன்னீர் – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தண்ணீர் – 5 கப்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித் தளை – சிறிது
எலுமிச்சை சாறு – டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை

வாணலி அல்லது பிரஷர் பேனில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்ற வரிசையில் தாளிக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளை, குடமிளகாய், முட்டைக்கோஸ் சேர்த்து அதிகத் தீயில் வேகமாக அடிப்பிடிக்காமல் இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
இப்போது உதிர்த்த பனீர், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூளுடன் கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ரவையைச் சேர்த்து அடுப்பில் நிதானமான சூட்டில் கிளறி, மூடிவைக்கவும்.
நன்றாக வெந்ததும் இறக்கி, நெய், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.
இப்போது சுவையான ரவைக் கிச்சடி ரெடி.!!