FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 27, 2016, 08:51:06 PM

Title: ~ மசாலா சப்பாத்தி ரோல் ~
Post by: MysteRy on June 27, 2016, 08:51:06 PM
மசாலா சப்பாத்தி ரோல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fmasa-e1467002273861.jpg&hash=c8942b326720a0e38f83d8a5cec1a5e4662b4216)

தேவையானபொருள்கள்
மேல் மாவுக்கு…


மைதா – கால் கிலோ,
கோதுமை மாவு – கால் கிலோ,
பேக்கிங் பவுடர் – 2 சிட்டிகை,
பால் – கால் கப்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

மசாலாவுக்கு…

பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு,
காரட், பீன்ஸ், குடமிளகாய் கலவை – 2 கப்,
வெங்காயம் – 2,
தக்காளி – 2,
பச்சை பட்டாணி – கால் கப்,
இஞ்சி, பூண்டு – சிறிது,
பச்சை மிளகாய் – 2,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, மல்லித் தளை – சிறிது,
சோம்பு சிறிது, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை

மைதா,கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, வெது வெதுப்பான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிக் கலவையை வதக்கி, வேக வைத்த பட்டாணி சேர்த்து, தக்காளியும் சேர்த்து வதக்கவும். அடுத்து இஞ்சி, பூண்டு, சோம்பு சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து, பச்சை வாடை போக நன்கு வதக்கவும். பிறகு வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்… இதுதான் சப்பாத்திக்குள் வைக்கப் போகிற மசாலா.
பிசைந்த மாவில் பெரிய எலுமிச்சை சைஸ் மாவு எடுத்து பிசைந்து எண்ணெய் தடவிய சப்பாத்திக்கல்லில் வைத்து பரத்தவும். திரட்டிய சப்பாத்தியில் கால் பாகம் தவிர்த்து, நடுவில் 2 டீஸ்பூன் மசாலா வைத்து உருட்டும் வகையில் நீளமாக பரத்தவும்.
சப்பாத்தியின் நாற்புறமும் தண்ணீர் தொட்டு தடவி, சப்பாத்தியை ரோலாக உருட்டி, விளிம்புகளை ஒட்டிவிடவும். குழிவான தவாவை சூடாக்கி, ரோலை வைத்து சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் – நெய் கலவையை ஊற்றவும். ரோலின் அடிபாகம் சிவந்ததும் திருப்பிப் போடவும். ரோல் நன்றாக சிவந்ததும், மேலாக பன்னீர் தூவியோ அல்லது பன்னீரை ரோலின் உள்ளே வைத்தோ சூடாக பரிமாறவும்.
இப்போது சுவையான மசாலா சப்பாத்தி ரோல் ரெடி.!!