FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 27, 2016, 08:43:48 PM
-
வெஜ் பரோட்டா ப்ரை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fmnj-4-e1467002337568.jpg&hash=1b5ba9b0fc04aa2b25f9ce7ef4b1e6dbaec8c43f)
தேவையானபொருள்கள்
பரோட்டா அல்லது சப்பாத்தி – 8-10, (மெல்லியதாக நீளமாக நறுக்கிக் கொள்ளவும்),
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது),
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது),
குடை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் – 4,
மல்லித் தளை – 1 கட்டு,
துருவிய காரட் – 1 கப்,
எண்ணெய் – 1/4 கப்,
மிளகாய் தூள் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு நன்கு பிரவுன் நிறமாக வரும் வரை வதக்கவும். குடைமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, உப்புச் சேர்த்து பின் நறுக்கிய பரோட்டாக்களை சேர்த்துக் கலந்து கீழே இறக்கவும். துருவிய கேரட்டையும் நறுக்கிய கொத்தமல்லியையும் சேர்த்து பரிமாறவும். கரம் மசாலா தேவையென்றால் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். பரோட்டாக்களை இதற்கென்று செய்ய வேண்டுமென்று அவசியமில்லை. இரவு செய்து மீந்து போன சப்பாத்தியை மீண்டும் தோசைக்கல்லில் போட்டு, நெய் போட்டு சிவக்க வறுத்து விட்டு அதையே உபயோகிக்கலாம்.
*இப்போது சுவையான வெஜ் பரோட்டா ப்ரை ரெடி.!!