FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 27, 2016, 08:40:57 PM
-
சோயா கிரேவி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F11%2Fsoya-gravy-in-tamilsoya-gravy-samayal-kurippucooking-tips-in-tamil-soya-gravysoya-gravy-seivathu-eppadi-tamil-language-e1448865503920.jpg&hash=6624901604ecdf70b1c1a442e5db5af03f3f556c)
தேவையான பொருட்கள்:
குட்டி சோயா – ஒரு கப்
தக்காளி – 2
வெங்காயம் – 2
அரைக்க:
தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 6 பல்
சோம்பு – சிறிதளவு
மிளகாய் தூள் – 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 6
தாளிக்க:
சோம்பு – சிறிதளவு
பட்டை – 2
செய்முறை:
* முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
* அரைக்க தந்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கவும்.
* சோயாவை(மீல் மேக்கர்) சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
* கடாயில் என்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு வதக்கவும்.
* பின்னர் வெங்காயம் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
* அதன் பின்னர் தக்காளி போட்டு வதக்கவும்.
* தக்காளியை நன்கு வெங்காயத்துடன் சேர்த்து கலக்கவும்.
* பின் சோயவையும் சேர்த்து வதக்கவும்.
* 5 நிமிடத்திற்கு பின், அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து வதக்கவும்.
* பச்சை வாசனை போகும் வரை, நன்கு கொதிக்க விடவும்.
* தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* கொதித்த பின், கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைத்து பரிமாறவும்.
* இந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.
குறிப்பு:
காரம் தேவைக்கு தகுந்தாற் போல், அதிகப்படுத்திக்கொள்ளவும்