FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 26, 2016, 09:58:46 AM

Title: ~ எல்லா சருமத்தினருக்கும் உதவும் கேரட்! ~
Post by: MysteRy on June 26, 2016, 09:58:46 AM
எல்லா சருமத்தினருக்கும் உதவும் கேரட்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fkar-1-e1466861411613.jpg&hash=3c7c39214185d6afaaf7fceff5468e70081c4676)

பொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் உடலும் அழகுடன் மின்னும், அதிலும் காய்கறிகளில் கேரட் மிகவும் சிறந்த ஒன்று.
அது சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் ஏற்றது. அதேப்போல் சருமத்திற்கும் அழகைத் தருகிறது.
உடல் மற்றும் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உடலில் சரியான செரிமான சக்தி இருக்க வேண்டும்.
அதற்கு தினமும் உணவு உண்டபின் ஒரு கேரட்டை சாப்பிட வேண்டும். இதனால் வாயில் உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து, உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்து விடுவதோடு, உடலில் செரிமான சக்தியும் அதிகரிக்கும்.
நார்மல் ஸ்கின்
நார்மல் ஸ்கின் உடையவர்கள் சிறிது கேரட் சாறு, சிறிது பப்பாளி மற்றும் சிறிது பாலை ஒன்றாக கலந்து அதனை முகம், கைகளில் பூசி 20-30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
வறண்ட சருமம்
வறண்ட சருமம் உள்ளவர்கள் கேரட் சாறு சில துளி, தேன் சில துளி கலந்து முகத்தில் தடவி 20-25 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகும்.
எண்ணெய் பசை சருமம்
ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் பரு தொல்லையால் அவதியுறுவார்கள். இதற்கு கேரட் சாறு சில துளி, தேன் சில துளி இதனுடன் சிறிது ஏலக்காய் பவுடர் கலந்த பேஸ்டை முகத்தில் பூசி 20-30 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகப்பரு மறைவதை கண்கூடாக காணலாம்.
வெயிலால் கருத்த சருமத்திற்கு
ஒரு தேக்கரண்டி அளவு கேரட் சாறு, தயிர், கடலை மாவு, மஞ்சள் எடுத்துக் கொள்ளுங்கள், இந்த கலவையை முகம், கைகளில் பூசி 20-30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவ வெயிலினால் ஏற்பட்ட கருப்பு மறையும்.
முதுமையான தோற்றம் மறைய
ஒரு தேக்கரண்டி கேரட் சாறு, சிறிது வாழைப்பழம் மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு எடுத்துக் கொள்ளவும், இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் வட்ட சுழற்சியில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர நாளடைவில் முகச்சுருக்கம் மறைந்து இளமையான தோற்றம் கிடைக்கும்.