ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 108
இந்த களத்தின்இந்த நிழல் படம் Pavithra அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F108.jpg&hash=b86ffc7e26f930298a6ae86b1ab31bc5064d26f7)
வணக்கம் !!!
நட்பா காதலா ... ???
காதலா நட்பா ...???
நட்பால் காதல் வந்ததா...???
காதலால் நட்பு வந்ததா ...???
மாத பிதா குரு தெய்வம் !
இடையில் நட்பைச் சேர்க்க
மறந்தார்கள் ஏனோ ???
பெற்றோர்களுக்கு அடுத்து
இறைவன் கொடுத்த வரம் நட்பு ...!!!
என் தோழனே,
வாழ்க்கையில் நாம் ஏற்படுத்திக் கொண்ட
உறவுகள்யாவும் ஒரு வித
எதிர்ப்பார்ப்புடன் உண்டானது
ஆனால் உன்மேல் நான் கொண்ட நட்பு
எதிர்ப்பார்ப்பின்றி வந்தது !!!
அரட்டைகள் அடித்தோம் !!!
ஒன்று சேர்ந்து ஊர் சுற்றினோம் !!!
உணவுகளை பகிர்ந்து உண்ணோம் !!!
ஒன்று சேர்ந்து வம்புக்கு சென்றோம் !!!
என் கஷ்ட நேரங்களில் உன் கைக் கொடுத்தாய் !!!
உன் துன்ப நேரத்தில் சாய என் தோல் தந்தேன் !!!
உன்மேல் நான் கொண்டேன் அக்கறைத்
ஒரு தோழியாக ....!!!
என்மேல் நீ அக்கறைக் கொண்டாயா
என் தோழனே ??? !!!
அக்கறைக் காட்டினாய் ...உரிமையும் சேர்த்து எடுத்து
கொண்டாய் என்று எண்ணுகிறேன் ..... !!! ~
ஒரு நண்பனாய் நீ உரிமை எடுத்துத்திருந்தால்
உமது கட்டளைகளுக்கு என்றும்
அடிப்பணிவேன் தோழனே !!!
நீயோ காதலனாக உரிமை எடுத்தாய் !!!
உன்மேல் நான் கொண்ட அக்கறையும் அன்பும்
என்வசம் உன்னை காதல் வயம் படவைத்திருந்தால் !!!
கோடி முறை மன்னிப்புக் கேட்கின்றேன் ...
ஏற்றுக்கொள் !!!
நண்பனாக உன்னை நேசித்த உள்ளம்
காதலனாக ஏற்க மறுக்கின்றது !!! ~
அன்று பூக்களோடு என்னை ஏற்றுக்கொள் ,....
என்று சொல்லிவந்தாய் .... !!!
பூக்களை வாங்கி இன்றும் உன்னை
ஏற்க தயாராக உள்ளேன் !!!
காதலனாக இல்லை என் ஆருயிர் தோழனாக !!!
உன் வருகையை எண்ணிக் காத்திருப்பேன் என் நண்பனே !!!
நட்பு என்பது இறைவனை போன்று
தூய்மையானது புனிதமானது ... !!!
அதைக் காதல் என்றுச் சொல்லி
நட்பெனும் பொக்கிஷத்தை இழந்துவிடாதீர் !!!
நட்பு .....யாராலும் இடைப்போட முடியாது !!!
உண்மையான நட்பை விலைக்கு வாங்கவும் முடியாது !!!
அனைத்து நண்பர்களுக்கும் !!!
என் FTC நண்பர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் !!!
~ !!! நன்றி !!! ~
~ !!! என்றும் நட்புடன் !!! ~
~ !!! ரி தி கா !!! ~