FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 25, 2016, 11:31:29 PM
-
பார்லி லெண்டில்ஸ் சூப்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2FCapture-13.jpg&hash=c4dc6ebd169c2a3b9a283672000407e4cb0eb386)
லெண்டில்ஸ் – 1 கப்
பார்லி – 1/2 கப்
ரோஸ்மேரி இலைகள் – சிறிது
வெங்காயம் – 1
தக்காளி – 1
செலரி – 4
காரட் – 1
பூண்டு – 4 பல் நசுக்கியது
உப்பு, மிளகு தூள் – தேவையான அளவு
சீஸ் – விரும்பினால்
வெங்காயம், தக்காளி, செலரி, காரட், பூண்டு முதலியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பிரஸர் குக்கரில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நசுக்கிய பூண்டினை சேர்த்து வதக்கிய பிறகு வெங்காயம் சேர்த்து கொள்ளவும். இத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய செலரி, காரட்டை இத்துடன் சேர்க்கவும். பார்லி, லெண்டில்ஸ்யை சேர்த்து கொள்ளவும்.
தேவையான அளவு தண்ணீர் (சுமார் 4 – 5 கப் ) மற்றும் ரோஸ்மேரி இலைகள் சேர்த்து கொள்ளவும். இதனை பிரஸர் குக்கரில் 4 முதல் 5 விசில் வரும் வரை வேகவிடவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, மிளகுதூள் சேர்த்து கலந்து கொள்ளவும். சத்தான சூப் ரெடி. பறிமாறும் பொழுது விரும்பினால் சீஸ் சேர்த்து கொள்ளலாம்.