FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 25, 2016, 11:26:52 PM
-
சுறா மீன் புட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2F-%25E0%25AE%25AE%25E0%25AF%2580%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581-e1466775051226.jpg&hash=5ee9a39a73fd394122bd54ab7070f703796d5aa9)
சுறா மீன் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி + 1/4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 15 பல்
பச்சை மிளகாய் – 6
கறிவேப்பிலை – 5 இலை
கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி – 1 துண்டு
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
முதலில் சுறாமீனை சுத்தம் செய்து வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் சுறாமீனை போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அத்துடன் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். சுறாமீன் நன்றாக வெந்த பிறகு சிறிது நேரம் ஆறவிட்டு, பிறகு அதனுடைய தோலினை நீக்கிவிட்டு மீனை உதிர்த்து கொள்ளவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முதலியவற்றை பொடியாக வெட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து பின் பூண்டு போட்டு நன்றாக 2 நிமிடம் வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், கருவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பின், உதிர்த்து வைத்துள்ள சுறாமீன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். கடைசியில் இஞ்சி, கொத்தமல்லி சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். சுவையான சுறாபுட்டு ரெடி.