FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on June 25, 2016, 06:31:08 AM
-
காலை வருடும்
கொலுசுக்கு உன்
காலடி ஓசை கேட்டதுவோ
காளை நீ வரும் வழியை
கண் மலர் நோக்கியதோ
உன் இதய துடிப்பின் எதிரொலி
என் மனசுக்குள் ஊஞ்சல் ஆடியதோ
காதலின் பொருள் சொல்வாயோ
காலமெல்லாம் என்னைக்
காக்க வைப்பாயோ.
உன் சிரிப்பின் சங்கீதம்
என் காலையின் பூபாளம்
காதோடு கிசு கிசுக்கும்
தேன் துளிகள்
மாலையின் என்னைத் தாலாட்டும்
ஹம்சத்வனி
சிறைப் பிடித்த என் விழிகளைத்
திருப்பிக் கொடுத்துவிடு
இல்லையென்றால் வந்துவிடு
காலமெல்லாம் என் அருகில்
பக்தனாக....
-
SWEETIE என்னயா கூப்பிடுறீங்க ?
-
மிக அருமை கவிதை குயிலே...
-
அருமை ஸ்வீட்டியே
-
தமிழன் , Joke guy எமினென் ...... வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றிகள்.
-
அருமை சகோ தலைப்பு
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Freactiongif.org%2Fwp-content%2Fuploads%2FGIF%2F2014%2F08%2FGIF--Clap-applause-good-job-nice-one-clapping-Barack-Obama-GIF.gif&hash=f45d790affc32ef3a1e7772f09710db55fca1795)
-
நன்றிகள் சகோதரா ஜெர்ரி ரித்திகா