FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 24, 2016, 08:24:59 PM
-
பாவ் பாஜி மசாலா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2FIMG_8545-e1466668158546.jpg&hash=2f9de0913e140000994be100e7e3730549f19822)
தேவையானவை
உருளை கிழங்கு – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
பட்டாணி(க்ரின் பீஸ் – 1/4 கப்
கேரட் – 2
க்ஃலிப்ளவர் – 1/2 கப்(நறுக்கியது)
இஞ்ஞி & பூண்டு பேஸ்ட் – 1/2 தே.க
கொத்தமல்லி இலை – 1/2 தே.க
உப்பு – தேவைகேற்ப்ப
பாவ் ப்ரட் – 4
பட்டர் – 1 துண்டு
லெமன் – வெட்டிய துண்டுகள்
வெங்காயம்
செய்முறை
உருளை கிழங்கு,கஃலிப்ளவர்,கேரட்,பீஸ், எல்லாவற்றையும் துண்டுகாளாக்கி உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து வேகவைக்கவும்.
கடாயில் நெய்+எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்ஞி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கிய பின் பாவ் பாஜி
மசாலா சேர்த்து வேக வைத்துள்ள காயயையும் சேர்த்து நன்றாக கலக்கி கொஞ்சம் தண்ணிர் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைக்கவும்.
நனறாக மாஷரால் மாஷ் செய்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
தவாவில் கொஞ்சம் பட்டர் போட்டு அதில் பாவ துண்டுகளை தேய்த்து பாவ் லைட்டா ப்ரவுனாக மாறும் போது எடுத்து லெமன் துண்டுகள்+ பாஜியோட பரிமாறவும்.